கரூரில் த.வெ.க. பிரச்சார கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார். கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறவும், காயம் அடைந்தவர்கள் கிச்சை பெற்று வரும் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறவும் நேற்று மாலை கரூர் அரசு மருத்துவமனைக்கு நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் பி. எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா வந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து வெள்ளகோவில், அரவக்குறிச்சி க்கு சென்று
இறந்தவர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். உடன் மாநில பொறுப்பாளர்கள் கூடல் செல்வேந்திரன்,சங்கரலிங்கம்,மாநில இளைஞர் அணி பொறுப்பாளர்கள் எம்.எஸ் மணி, சுறா, திருச்சி பொறுப்பாளர்கள் டைமன் ராஜா,சிவா,தலைமை நிலைய செயலாளர் ரகுபதி மாநில சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் அபுதாஹிர்,மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் ஆனந்த், கம்பம் நகர பொறுப்பாளர்கள் அய்யர்,சுப்பிரமணி
கம்பம் பாஸ்கரன், முத்துகிருஷ்ணன், மற்றும் பலர் உடன் இருந்தனர்.
