கரூர் வேலுச்சாமி புரத்தில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற மக்களை சந்திப்போம் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 39 பேர் உயிரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை சந்திக்க வந்த பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் காயமடைந்த நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது

நேற்று கரூரில் நடந்த வெற்றி கழகம் நிகழ்ச்சியில் துயரமான சம்பவம் இந்தியா உலுக்கிய சம்பவம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூட்ட நெரிசலில் இதுவரை 39 பேர் பலியாகி உள்ளனர் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இன்றைக்கு இருக்கக்கூடிய உயர் நீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.