சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பு: நெஞ்சே பதற வைக்கக்கூடிய செயலாக இது இருக்கிறது. உயிருக்காக போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். காயம் அடைந்த குடும்பத்தினர்களுக்கு ஐந்து லட்சம் எழுப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் என தெரிவித்தார்.

இந்தப் பெரும் துயரத்திற்கு யார் பொறுப்பு என்பதை விட உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். தமிழக அரசு எடுத்திருக்கக்கூடிய அந்த போர்க்கால நடவடிக்கை வரவேற்கத்தக்கதாக இருக்கிறது.
விஜய் கூட்டத்திற்கு கூடுபவர்கள் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாக இருக்கிறார்கள். அந்த இளைஞர்களுக்கு பாதுகாப்பு குறித்து எந்த வித அக்கறையும் இல்லை ஆர்வம் மிகுதியால் செயல்படுகிறார்கள். கூட்டத்தில் விஜய் இருக்கிற இடத்தை நோக்கி அவர்கள் நகர்கிறார்கள். இதனால் ஏற்பட்டிருக்கிற நெரிசல் காரணமாக தான் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என தெரிவித்தார்

ஒரு நிகழ்ச்சி ஒரு மணி நேரம் தாமதம் ஆகினால் அதன் பிறகு கூடுகின்ற கூட்டத்தால், இன்னும் மெர்சல் அதிகரித்து வருகிறது. ஒரு நிகழ்ச்சி தொடங்கும் போது காலம் தாமதம் இல்லாமல் தொடங்கி விட வேண்டும். நிகழ்ச்சிக்கு வருபவர்களை ஒரே இடத்தில் குவிய விடாமல், தடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளில் இது போன்று லட்சக்கணக்கான அவர்களை கூட்டி பேரணி மற்றும் மாநாடுகளை நடத்தி இருக்கிறோம். எவ்வளவு பேர் வருகிறார்கள் என கட்சி நடத்துபவர்களுக்கு தெரியும் ஆனால் காவல்துறையினர் யூகத்தின் அடிப்படையில் தீர்மானிக்க முடியாது. நான் சொல்லுகின்ற அளவிற்கு ஏற்றவாறு தான் இடத்தையும் பாதுகாப்பையும் காவல்துறையினர் கொடுப்பார்கள் என தெரிவித்தார்.
காவல்துறை நான் சொல்கின்ற கட்டுப்பாடுகளையும் கேட்டு தான் ஆக வேண்டும். பாதுகாப்பு வழங்குவதற்கு காவல்துறை தவறிவிட்டது எனப் போகின்ற போக்கில் சொல்லி விட முடியாது.
விஜய் முகநூல் மட்டும் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்திருக்கிறார். மீண்டும் விஜய் மக்களை சந்திக்க செல்வார் என நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.