இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். பகல் 12 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டம் இரவு 7 மணிக்கு தொடங்கிய காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசல் பொது மக்கள் பலர் மயக்கமடைந்து விழுந்திருக்கின்றனர். தொடர்ச்சியாகப் பலர் பாதிப்புக்குள்ளானதும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை பலன் இல்லாமல் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனயையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

மேலும் 40க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
சிகிச்சை பெற்று வரும் அனைவரும் முழு நலம் பெற்று இல்லம் திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் . உயிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 25 லட்சம் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் தாங்களின் கட்சி பலத்தை நீருப்பிக்க வேண்டி மாநாடு பொது கூட்டங்கள் போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக தமிழகத்தில் நடை பெறுவது வழக்கம் ஆனால் இது போன்ற பெரிய அளவில் உயிழப்பு சம்பங்கள் நடை பெற்றதில்லை . மேலும் விஜய் மாநாட்டில் 35க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையை உலுக்கி உள்ளது.
மேலும் தவெக நிர்வாகிகள் மாநாட்டில் 10000.பேர் கூடுவார்கள் என்று காவல் துறையினரிடம் அனுமதி கேட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் மாநாட்டில் 30000க்கும் மேற்பட்ட பொது மக்கள் கூடி உள்ளனர். மேலும் பகல் 12 மணிக்கு நடை பெறுவதாக அறிவிக்க பட்ட கூட்டம் இரவு 7 மணிக்கு தொடங்கய காரணத்தால் தான் இந்த உயிரிழப்பு சம்பவங்கள் நடை பெற்றன. ஆகவே 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பிற்கு காரணமான தவெக விஜய் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறை படுத்த வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழக அரசை கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.