கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அதிக அளவில் தொண்டர்கள் மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இறந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் உத்தரவிட்டதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் சிகிச்சையில் உள்ள நபர்களுக்கு ஆறுதல் கூறிச் சென்றார்.