ராமநாதபுரம் செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த எம் பி நவாஸ் கனி மதுரை விமானத்தில் செய்தியாளர் சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்;-

கரூரில் நேற்று நடைபெற்றது ஒரு பெரும் துயரம் அந்த விபத்தில் இறந்தவர்களை குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் உன்னுடைய சார்பாகவும் இந்திய யூனியன் முஸ்லிம்களுக்கு சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்
காயமடைந்து சிகிச்சை பெற்று வரக்கூடியவர்கள் விரைவிலே பூரண குணமடைவதற்கும் இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம் நேற்று இந்த செய்தி தெரிந்தவுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கரூரில் இருக்க கூடிய முன்னாள் அமைச்சருக்கும் திருச்சியில் இருந்து பள்ளி கல்வித்துறை அமைச்சரும் மற்றும் மருத்துவ துறை அமைச்சர் உடனடியாக அனுப்பி காவல்துறையும் கூடுதலாக அனுப்பி தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக செய்ய சொல்லி மாண்புமிகு முதல்வர் அவர்கள் நள்ளிரவிலே அங்கு சென்று அங்கே பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் சந்தித்து அவர்களுக்கு கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெறக் கூடியவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார்.

ரோட் ஷோவில் தான் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது என்ற கேள்விக்கு
இதைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியவில்லை
தவெக அனுமதி கேட்ட இடத்தை விட்டு மற்ற இடத்தில் அனுமதி கொடுத்ததால் தான் இந்த பிரச்சனைக்கு காரணமா கேள்விக்கு
டிஜிபி தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார் அவர்கள் கேட்ட இடத்தை விட பெரிய இடத்தில் தான் அனுமதி கொடுத்திருக்கிறார்கள் அவர்கள் கேட்ட இடத்தில் அனுமதி கொடுத்திருந்தால் இன்னும் பாதிப்பு அதிகமாயிருக்கும்
நடந்த சம்பவங்களுக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கு
இதற்கு ஒரு தனிநபர் விசாரணை கமிஷன் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறார்கள் அந்த அறிக்கை வந்தவுடன் தான் யார் பொறுப்பு என்பது தெரிய வரும்.