கரூரில் தமிழக வெற்றி கழகம் நடைபெற்ற பரப்புரையில் நெரிசலில் சிக்கி 39 பேர் பலியானவர்களை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சென்று இறந்தவர்களின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி இறந்தவர்களுக்கு அறிவுத்திருந்த நிதி உதவி ரூபாய் 10 லட்சம் காசோலை வழங்கப்படும்.

பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார் இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்பொழுது செய்தியாளர்கள் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகுந்த துயரத்தோடு, கணத்த இதயத்தோடு உங்கள் முன்பு நிற்கிறேன். கரூரில் நடந்தது பெருந்துயரம் குறித்து என்னா. பேச முடியவில்லை.

நேற்று இரவு 7.30 மணிக்கு கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் மருத்துவமனைக்கு செல்வதாக தகவல் வந்தது. உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சியரை மருத்துவமனைக்கு விரைந்து செல்ல அறிவுறுத்தினேன்.
அடுத்த சில மணி நேரத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் வந்ததை அடுத்து, அமைச்சர்களை கரூருக்கு அனுப்பி வைத்தேன். தலைமைச் செயலகத்தில் உடனடியாக அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி கரூரில் உள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தேன்.
அருகாமை மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளையும் உதவிக்கு அனுப்பி வைத்தேன். இந்த சம்பவத்தில் 39 உயிர்களை இழந்துள்ளோம். கொடூரமான காட்சிகள். தொலைக்காட்சியில் பார்த்தபோது எனக்கு மனசு கேட்கவில்லை. வீட்டில் இருக்க முடியவில்லை. அதனால் தான் 1 மணி அளவில் புறப்பட்டு கரூர் வந்தேன்.

ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை உயிர்கள் பலியானது இல்லை. இனிமேல் இது நடக்கக்கூடாது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு கணத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்தினேன். இறந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டேன்.
அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. ஆணையம் சொல்லும் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நீங்கள் யார் கைது செய்யப்படுவார்கள் என்று நீங்கள் கேட்பதற்கு எல்லாம் நான் உட்படுத்த தயாராக இல்லை. கேட்ட இடத்தை தரவில்லை, பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார்.