இன்றைய தினம் செப்டம்பர் 27இல் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 34 பேர் உயிரிழந்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
பொது நிகழ்ச்சிகளின் பாதுகாப்புக் குறித்து மீண்டும் ஒருமுறை கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. பாதுகாப்பு குறைபாடுகளும், போலீசார் போட்ட கட்டளைகளை த.வெ.க. தொண்டர்கள் கேட்காததும்
விதிமீறலும் உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது.
விஜய் பேசுவதற்கு ஏழு மணிக்கு வருவார் என்று தெரிந்தும் 4:00 மணி முதலே கூட்டம் கூடி உள்ளது. கூட்டம் கூடிய இடத்தில் எந்த தண்ணீர் வசதியும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
சிறிய குழந்தைகள் பெண்கள் உட்பட பலரும் குடியிருந்த இடத்தில் பாதுகாப்பு முற்றிலும் குளறுபடியாகிவிட்டது. தொண்டர்கள் பார்க்க முண்டியடித்துச் சென்றதுதான் நெரிசலுக்கு காரணம் என அங்கிருந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பரப்புரைக்கு அனுமதி கோரியபோது, த.வெ.க. தொண்டர்கள் வெறும் 10,000 பேரை மட்டுமே எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்த நிலையில், உண்மையில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கூட்டம் கூடியுள்ளது. மேலும், காவல்துறை விதித்த அத்தியாவசியப் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மை விதிகள் அத்தனையும் மீறப்பட்டதே இந்த துயரச் சம்பவத்துக்கு முக்கியக் காரணமாகத் தெரிகிறது.
விதிமுறைகள் மீறப்படுவது
கூட்டத்தைக் கட்டுப்படுத்தப் போதுமான ஏற்பாடுகள் இல்லாமை பலி அதிகமாகி உள்ளது.
பாதுகாப்பான வெளியேறும் வழிகள் (Exits) உறுதி செய்யப்படவில்லை. இந்தக் காரணங்களால்
விபத்து ஏற்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பேச அனுமதித்த அதே இடத்தில் தான் விஜய்க்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்கள் பக்குவ பட்டவர்கள், கூட்ட நெரிசல் ஏற்பட்ட போதும் சமாளித்துக் கொண்டனர். ஆனால் த.வெ.க. தொண்டர்கள் பக்குவப்படாமல் உணர்ச்சிவசப்பட்டதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் விரைந்தனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்நாள் அமைச்சர்கள் கே என் நேரு அன்பின் மகேஷ் பொய்யாமொழியும் கரூர் விரைந்தனர்.
எங்கு பார்த்தாலும் மரணம் ஓலங்கள் கேட்ட வண்ணம் உள்ளன. அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உறவினர்கள் குவிந்து வருவதால் கரூரே சோகமயமாக காட்சி அளிக்கிறது. கரூர் அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுகின்றனர்.