ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருணாச்சலம் திருமண மண்டபத்தில் 27ந் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஓய்வு பெற்ற ஆணையாளர் மணி , ஓய்வு பெற்ற நகராட்சி பொறியாளர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கௌரவ தலைவர்களாக மணி, திருமூர்த்தி ஆகியோர்களும். தலைவராக முருகேசன், துணைத் தலைவராக கோட்டை, பாலசுப்ரமணியன் ,மாரிமுத்து ஆகியோர்களும். செயலாளராக ரவிச்சந்திரன், இணைச்செயலாளராக ரத்தினம், முத்தையா, சின்னத்தம்பி, நாராயணன் ஆகியோர்களும் பொருளாளராக ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர்களாக சந்திரன், ராஜகோபால், சங்கத்தின் நிதி தணிக்கையாளர்களாக பெரியசாமி, பாலகுரு, ஈஸ்வரமூர்த்தி ஆய்கர்களும் நிர்வாக குழு உறுப்பினர்களாக கொ ன்றையாண்டி, சொக்கலிங்கம், கருப்பையா, சகுந்தலா, இந்திரா, சீனிவாசகம் உட்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர்
கூட்டத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சம்பள பட்டியல் ஆன்லைனில் எடுப்பதற்கு வழிமுறை செய்ய அரசை கேட்டுக் கொள்வது, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர்கள் அனைவரும் சங்கத்தில் சேர்க்க நடவடிக்கை எடுப்பது சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுப்பது சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் இல்லத்தில் நடைபெறும் அனைத்து சுப, துக்க நிகழ்ச்சிகள் அனைத்திலும் அனைவரும் கலந்து கொள்வது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.