மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி அரியலூரில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் 13 , 15 ,17 வயதுக்குட்பட்டவர்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது.

மாவட்ட விளையாட்டு மைதானம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, போட்டியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில், 13,15,17 வயதுக்குட்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், 518 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், 13 வயது மாணவர்கள் 15 கி.மீ, மாணவிகள் 10 கி.மீ, 15 மற்றும் 17 வயது மாணவர்கள் 20 கி.மீ, மாணவிகள் 15 கி.மீட்டர் தூரம் என போட்டிகள் நடத்தப்பட்டன.
அதில், முதல் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரூ.5,000, ரூ.3,000,ரூ.2,000 வீதமும், 4 முதல் 10 இடங்கள் பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வீதமும் பரிசுத் தொகை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் இரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ந.லெனின் அனைவரையும் வரவேற்றார்.
இதற்கான ஏற்பாடுகளை கைப்பந்து பயிற்றுநர்கள் ஹரிகரன், வாசுதேவன், தடகள பயிற்றுநர்கள் சந்தோஷ்குமார், துர்கா மற்றும் ஹாக்கி பயிற்றுநர்கள் ராஜ்குமார், மணிகண்டன், இறகுப் பந்து பயிற்றுநர் பொன்னரசன், உடற்கல்வி ஆசிரியர்கள் ரவி, ரமேஷ், நல்லமுத்து, வில்லாளன், தினேஷ், விமல், வந்தியதேவன், குமார், இளவரசன், விஜய் மற்றும் சிவசக்தி ஆகியோர் செய்திருந்தனர்.
