தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்திய தேசிய காங்கிரஸின் கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டைய தலைமையில் ஒன்றிய பாஜக அரசின் வாக்கு திருட்டை கண்டித்து பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் கையெழுத்து இயக்க பிரச்சாரம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வட்டார தலைவர் ஐயப்பன் திருவோணம் வட்டார தலைவர் சிவா நகரத்தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னேற வைத்தனர் மேலும் நிகழ்ச்சியில் ரவிச்சந்திரன் மோகன்ராஜ் சீனிவாசன் பாண்டித்துரை சம்பத் திருஞானம் அப்பாதுரை இளைஞர் காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன் மற்றும் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.