சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் ட்ரோன் இயக்குவது பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
தீயணைப்பு துறையினருக்கு ட்ரோன் கையாளுவது குறித்த சிறப்பு பயிற்சி வகுப்பில் டிரோன் மூலம் தீ பற்றிய கட்டிடங்களில் தீயை அணைக்கும் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும் தீயணைப்பு வீரர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.
