விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு ஒன்றியம் கான்சாபுரம் கிராமம் தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட திருமண மண்டப கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருமண மண்டப கட்டுமான பணிக்கு, ஏற்கனவே ரூ1இலட்சத்து 60 ஆயிரம் நிதியுதவி வழங்கி உள்ளார். தற்போது மேலும் இரண்டாவது முறையாக, ரூ.1இலட்சத்து 40ஆயிரம் நிதியுதவியும் ஆக மொத்தம் இந்த திருமண மண்டப கட்டுமான பணிக்கு, ரூ.3இலட்சம் நிதியுதவியினை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார். இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.