கன்னியாகுமரி கண்ணாடிப் பாலத்தில் உலகச்சுற்றுலா தினம் கொண்டாட்டங்கள்
தமிழக சுற்றுலா துறை சார்பில், உலக சுற்றுலா தினத்தின் 46_ம் ஆண்டின் கொண்டாட்டமாக சர்வதேச சுற்றுலா பயணிகள் தினம், தினம் ஆயிரக்காணக்கில் வந்து கூடும் இடமான கன்னியாகுமரியில், இந்த ஆண்டின் சுற்றுலா விழா கன்னியாகுமரியின் ஒரு புது அடையாளம்.

கடந்த ஆண்டு டிசம்பர் திங்கள் 30_ம் நாள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுவர் சிலை பாறைக்கும்- சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடல் பரப்பில் கட்டியுள்ள கண்ணாடிப் பாலத்தை திறந்து வைத்தார்.



சர்வதேச சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் நிலையில், கண்ணாடிப் பாலத்தில் தமிழக சுற்றுலாத்துறையின் கன்னியாகுமரி சுற்றுலா அதிகாரி காமராஜ் தலைமையில் பல்வேறு வகையான நாட்டுப்புற கலை கலைஞர்கள், கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மேலாளர் முருகபூபதி, சுற்றுலா துறை பணியாளர்கள், மணியாஸ் காட்டரிங் கல்லூரி விரிவுரையாளர்கள் சுற்றுலா காவலர்கள் இணைந்து இன்று(செப்டம்பர்_27)ம் நாள், குமரி வந்த பன்மொழி சுற்றுலா பயணிகளுக்கு. கன்னியாகுமரியின் அடையாளம் “சங்கு” மாலை அணிவித்தும், சுற்றுலா பயணிகளின் நெற்றியில் ‘திலகம்’ இட்டு இனிப்பு வழங்கி, கன்னியாகுமரி கண்ணாடிப் பாலத்தில் 46_ வது. உலக சுற்றுலா விழாவை கொண்டாடினார்கள்.