தமிழகம் முழுவதும் வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படம் வெளியாக உள்ளது

இதனை ஒட்டி நடிகர் தனுஷ் தனது தாய் தந்தையர் கஸ்தூரிராஜா மற்றும் மகன்கள் லிங்கா, யாத்ரா, மற்றும் உறவினர்களுடன் போடிநாயக்கனூர் அருகே உள்ள சங்கராபுரம் கருப்பசாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
தனது படம் வெற்றி அடைய வேண்டும் என்று நீண்ட நேரம் கண்ணை மூடி பிரார்த்தனை செய்து சாமி வழிபாடு செய்துவிட்டு அதன் பின்னர் கோவில் கருப்பசாமி சிலை முன்பு நின்றிருந்த தனது தாய் தந்தையர் கஸ்தூரிராஜா தம்பதியினர் காலில் விழுந்து ஆசி பெற்றார்
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து உடனடியாக தனது மகன்களுடன் புறப்பட்டுச் சென்றார்.
காலையில் இருந்து கேரவன் வேன் காத்திருந்த நிலையில் பத்து நிமிடம் மட்டுமே சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு சென்றார்.