தமிழ்நாடு வர்த்தக சங்கக் கூட்டமைப்பின் (TNCCI) ஒரு பிரிவான பெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு (BoT) மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய பாட்ஃப்ளுயன்ஸ் சவுத் ஸ்கேப் 2025 நிகழ்ச்சி, உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு மதுரையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் BoT தலைவர் விஜயதர்ஷன் கூறுகையில்,
பாகுபாடற்ற பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று நாடுகளைக் கடந்து நடைபெறும் கற்றல், கலாச்சார பரிமாற்றம், சமூக மகிழ்ச்சி. இவை அனைத்தும் மிக எளியதான, அதே சமயம் சக்திவாய்ந்த ஒரு சாதனமான, சுற்றுலா மூலம் சிறப்பாக வெளிப்படுகின்றன.

பாட்ஃப்ளூயன்ஸ் சவுத் ஸ்கேப் 2025, இது ஒரு சாதாரண சந்திப்பு நிகழ்ச்சி அல்ல. அது சிறந்த திறமையின் தாக்கம் – தமிழ்நாட்டின் மரபு, பண்பாடு மற்றும் திறமைகளை காப்பாற்றி உயர்த்துவதற்கு தலைவர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், புதுமையாளர்கள் மற்றும் பண்பாட்டு தூதுவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த நிகழ்ச்சியாகும் என்றார்.
தொடர்ந்து BoT தலைவர் விஜயதர்ஷன் புதிய சுற்றுலா செயலியை வெளியிட்டார்.
இது வடிவமைக்கப்பட்ட, இந்தியாவில் இதுவரை இல்லாத இலவச சுற்றுலா செயலியாக மதுரை நகருக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Google மற்றும் தனிப்பட்ட வழிகாட்டி இரண்டையும் ஒருங்கே கொண்டது என வர்ணிக்கப்பட்ட இந்த செயலி நேரத்திற்கு ஏற்ப திட்டமிடுதல், தனிப்பட்ட பரிந்துரைகள் மற்றும் உள்ளூர் அனுபவங்களை வழங்குகிறது.
மேலும் உள்ளூர் போக்குவரத்து இயக்குநர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் ஆர்வத்துடன் QR குறியீடு பயன்படுத்த தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். விரைவில் சாலை, ரயில் மற்றும் விமான நிலையங்களிலும் விரிவாக்கத் திட்டம் உள்ளது.
மேலும் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தில் வண்டியூர் குளம் கயாக்கிங் மற்றும் கனோயிங்; மிகப் பெரிய மீனாட்சி அம்மன் சிற்பம், மாலை நேர நீர் மற்றும் ஒளி காட்சிகள், தெப்பகுளம் பலவகை படகு பயணங்கள்; லேசர் மற்றும் மிஸ்ட் பாரம்பரிய காட்சிகள்.
வைகை நதிநீர் படகு பயணங்கள்; ஷாப்பிங் மற்றும் உணவுக் கடைகள்.
தமிழ் சங்கம் வளாகத்தில் வெளிப்புற 3D லேசர் காட்சிகள்: உட்புற ஆடிடோரியம்
திரைப்படங்கள் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்,கோவில் கிழக்கு வாயில் பூங்கா – வெளிப்புற கலாச்சார நிகழ்ச்சிகள்; கோவில் நகல் கட்டடங்களுடன் செல்ஃபி ஸ்பாட்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி டி உமாதேவி யிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள் நிறுவனங்கள்
இந்நிகழ்வில் அனைத்து அமைப்புகளின் தலைவர் வி. நீதிமோகன் , அரவிந்த கண் மருத்துவமனை டாக்டர் வெங்கடேஷ் பிரஜ்னா மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இயக்குளர் திருமதி காம்னி குருஷங்கர் ஃபார்ச்சூன் பாண்டியன் ஹோட்டல் திரு. வாசுதேவன், நிர்வாக இயக்குனர் ஏவிஎன் ஆரோக்கிய ஆயுர்வேத மருத்துவமனை – டாக்டர். ரமேஷ் ஆர், வாரியர், இயக்குனர் மற்றும் நிர்வாக இயக்குநர். கடம்பவனம் சித்ரா கணபதி உட்பட தலைவர்கள் மற்றும் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்;
மேலும் கீழ்கண்ட நிறுவனங்களும் வலுவான பங்களிப்பினை இந்நிகழ்ச்சியில் வழங்கின. மேலும் தான் ஃபவுண்டேஷன்,INTACH மதுரை பிரிவு,FoHS பாண்டியர்கள் மற்றும் மதுரையின் சுற்றுலா நிலப்பரப்பை மேம்படுத்தவும், அதன் பண்பாட்டு அடையாளத்தை பாதுகாக்கவும் சிறப்பான பங்களிப்பு செய்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் கௌரவிக்கப்பட்டனர்.