தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான 30 வார்டுகள் உள்ளது.
இதில் வடகரை பத்தாவது வார்டு பகுதியில் துப்புரவு பணியாளராக பணிபுரிபவர்கள் பெத்தனசாமி, முத்து, பஞ்சவர்ணம் மற்றும் ஓட்டுநர் வைரவன் ஆகியோர்.
இன்று காலை வழக்கம் போல தெருவில் உள்ள குப்பைகளை வீடு வீடாகச் சென்று வண்டியில் சேகரித்து டாட்டா மேஜிக் வண்டியில் ஏற்றி சென்றுள்ளனர்

அப்பொழுது வடகரை பள்ளிவாசல் தெரு பத்தாவது வார்டு பகுதியைச் சேர்ந்தசல் சல்மான் என்பவர் துப்புரவு பணியாளர்களிடம் இந்த இடத்தில் குப்பை வண்டியை நிறுத்தி குப்பையை ஏற்றி செல்லக் கூடாது என கூறி துப்புரவு தொழிலாளர்களை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது
இந்நிலையில் இத்தகவல் அறிந்த சக துப்புறரவு பணியாளர்கள் ஒன்று திரண்டு பெரியகுளம் பகுதியில் உள்ள திண்டுக்கல் – தேனி தேசிய நெடுஞ்சாலையில் அம்பேத்கர் சிலை முன்பு தாங்கள் குப்பைகள் கொண்டு செல்லும் வாகனங்களை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அப்போது தங்களை தாக்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு கண்டனை கோஷங்கள் எழுப்பினர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் நகராட்சி ஊழியர்களை வைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தி துப்புரவு பணியாளர்களை தாக்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் துப்புரவு பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்
இதனால் தேனி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.