கோவை, வடவள்ளி அருகே ஸ்கூட்டரில் சென்ற போது காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். அவரது இரண்டு குழந்தைகள் காயமின்றி தப்பினர். படுகாயம் அடைந்த கோவை அரசு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு .
கோவை, வடவள்ளி அடுத்த பொம்மனம்பாளையம் அருகே கொட்டமுத்து அம்மன் கோவில் உள்ளது.

இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் செந்தில் என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை டியூசனுக்கு சென்று அவரது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
அவர் கொட்டத்து அம்மன் கோவில் அருகே மேடான பகுதிக்குச் சென்ற போது காட்டு யானை ஒன்று எதிரே வந்தது. அதை பார்த்ததும் உஷாரான செந்தில், தனது ஸ்கூட்டரில் வேகமாக சென்றார். அப்பொழுது காட்டு யானை பின் தொடர்ந்து சென்று செந்திலை தாக்கியது. இதில் குழந்தைகள் எந்த வித காயமும் இல்லாமல் உயிர் தப்பினர்.
யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த செந்திலை வனத் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலமின்றி உயிரிழந்தார்.
செந்தில் தாக்கியது ரோலக்ஸ் என்ற காட்டு யானை தகவல் தீவிரமாக பரவியது. இதனால் அவரை தாக்கியது ரோலக்ஸ் காட்டு யானையா ? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் இடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.