• Mon. Dec 29th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் தாமதம் ..,

ByPrabhu Sekar

Sep 26, 2025

சென்னையில் இருந்து அந்தமானுக்கு இன்று காலை 7:20 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட்டுச் செல்ல வேண்டும். அந்த விமானத்தில் இன்று சென்னையில் இருந்து அந்தமான் செல்வதற்காக 158 பயணிகள் இருக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் காலை 6 மணிக்கு, முன்னதாகவே, சென்னை விமான நிலையத்திற்கு வந்து விட்டனர். ஆனால் அந்தமானில் மோசமான வானிலை நிலவுவதால், விமானம் இன்று தாமதமாக, காலை 11 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து சென்னையில் இருந்து அந்தமான் செல்ல வந்திருந்த 158 பயணிகளும் சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.

அதோடு பயணிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதங்களும் செய்கின்றனர். மற்ற விமானங்கள், அந்தமானில் வந்து தரை இறங்கி, சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த விமானத்திற்கு மட்டும், என்ன மோசமான வானிலை? என்று கேட்கின்றனர். அதற்கு அதிகாரிகள், இது பெரிய ரக விமானம். எனவே பயணிகள் பாதுகாப்பு நலன் கருதியே, வானிலை சீரடைந்த பின்பு, செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி, பயணிகளை சமாதானப்படுத்தி வருகின்றனர்.

இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.