• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கரூரில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்..,

ByAnandakumar

Sep 26, 2025

கரூரில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமியின், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் பிரச்சார பயண நிகழ்ச்சி மிகவுக் சிறப்பாக் ந்டைபெற்றது. கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கரூரில் கொட்டு மழையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது.

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது செந்தில் பாலாஜியை ஊழல் வாதி என கேவலமாக பேசினார்.இப்பொழுது செந்தில் பாலாஜி நல்லவர்,வல்லவர் கோடு போட சொன்னால் ரோடு போடுகிறார் என பேசுகிறார்.அன்று பேசியது நல்ல வாய், இப்பொழுது பேசுவது என்ன வாய் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

உலகத்தில் உள்ள எல்லாவித மோசடிகளையும் ஏமாற்று வித்தைகளை கற்றவர் செந்தில் பாலாஜி.ஆர் கே நகரில் தேர்தலுக்கு 20 ரூபாய் கொடுத்து ஏமாற்றியவர் செந்தில் பாலாஜி,

பொய்யை மட்டுமே முதலீடாக கொண்டவர் செந்தில் பாலாஜி. டாஸ்மாக்ல் மட்டும் இருபதாயிரம் கோடி ஊழல் செய்துள்ளார். மின்சாரத் துறையில் பல ஆயிரம் கோடி ஊழல் டிரான்ஸ்பாரம் ஊழலில் தப்பிக்கவே முடியாது. நான் விடமாட்டேன்.

அதிமுக ஆட்சிக்கு வரும் . சட்டப்படி நடவடிக்கை எடுக்கபடும்
பொய் சொல்வதில் டாக்டர் பட்டம் செந்தில் பாலாஜி.

2021 தேர்தல் பிரச்சாரத்தில் மாட்டு வண்டியில் மணல் எடுக்கலாம் என்று சொல்லி வாக்குகள் வாங்கி வெற்றி பெற்று அமைச்சரானார்.இன்று லாரியில் மணல் திருடுகிறார்கள். கரூர் வாங்கலில் திருட்டு மணல் எடுப்பதை கண்டித்தவரை அறிவாளால் வெட்டி சாய்த்தனர் . கரூர் ஒன்றியத்தில் மட்டும் ஐந்து கொலைகள் திருட்டு மணலால் நடந்துள்ளது.

2021 அனைத்து குடும்பங்களுக்கும் வேலை வாய்ப்பு அரவக்குறிச்சியில் இலவச பட்டா என மக்களை ஏமாற்றி விட்டார். கடந்த தேர்தல் நேரத்தில் பெண்களுக்கு கொலுசு கொடுத்தார். அதுவும் போலி கொலுசு.

உங்களை ஏமாற்றியவற்க்கு நீங்கள் வாக்களிப்பீர்களா… அவரை டெபாசிட் இழக்க செய்வீர்களா ..

என் எழுச்சி பயணத்தை தடை செய்ய எவ்வளவோ முட்டு கட்டைகள் .
எங்க சக்தியை யாராலும் தடுக்க முடியாது.

அதிமுக தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடும் காவல் துறைக்கு எச்சரிக்கை ..நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம்.

கரூரை காப்பது நம் கடமை தீய சக்தி திமுகவை வீழ்த்த வேண்டிய நேரம் வந்து விட்டது.

நான்கு வருடத்தில் 30 ஆயிரம் கோடி கொள்ளை .. இந்தியாவிலேயே ஊழலில் முதல் மாநிலம் தமிழ்நாடு போதை பொருள் விற்பனை தலைவிரித்து ஆடுகிறது.
திண்டுக்கல் துணை மேயர் மகன் போதை வழக்கில் மாட்டி உள்ளார்.
உங்கள் ஆட்சிக்கு முடிவு கட்ட போவது போதை கலாச்சாரம்தான்

சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கேட்டு விட்டது. காவல்துறைக்கு எச்சரிக்கை
காவல்துறை இன்று ஏவல் துறையாக மாறிவிட்டது செந்தில் பாலாஜியை கூட ஸ்டாலினால் காப்பாற்ற முடியவில்லை உங்களை எப்படி காப்பாற்ற போகிறார் .
செந்தில் பாலாஜி 1 வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்தவர், மீண்டும் சிறை செல்வார்.

160 வது எழுச்சிப் பயணம் கரூரில் நடந்து வருகிறது.
லட்சக்கணக்கான மக்களை சந்தித்து வந்துள்ளேன்

திருட்டு மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும், எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளது அதிகாரிகள் தவறுக்கு துணை போகாதீர்கள், உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது கரூரில் சில அதிகாரிகள் திமுகவிற்கு கைக்கூலியாக உள்ளனர்.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நீங்கள் தப்ப முடியாது.எச்சரிக்கிறேன்.

இன்னைக்கு நாட்டுல தங்கத்தை திருடுவாங்க வைரத்தை திருடுவாங்க வெள்ளியை திருவாங்க ஆனா திமுக ஆட்சியில் கிட்டினியை திருடுகிறார்கள்.
இந்த ஆட்சியில மருத்துவமனைக்கு போக முடியவில்லை, கிட்னி தப்புமா என தெரியவில்லை. கிட்னி திருட்டை அதிமுக முறையாக விசாரித்து தண்டனை வழங்கும்
நாமக்கல்ல ஒரு பெண்ணிடம் கிட்னிக்கு பதிலாக கல்லீரலை திருடி விட்டார்கள் .

குவாரி எம் சாண்ட் க்கு10 லட்சம் கேட்டு மிரட்டுகிறார்கள். இப்படி கொள்ளை அடித்து மக்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற நினைக்கிறார்கள்

டெக்ஸ்டைல்ஸ் தொழிலார்கள் நிலை பரிதாபமாக உள்ளது அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் கொண்டு வரப்பட்டு விவசாயிகள் பயனடைந்தனர்.

அதிமுக ஆட்சியில் இரண்டு முறை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்காக பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது…
அதிமுக ஆட்சியில் சுமார் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை கொடுக்கப்பட்டது இளைஞர்கள் பொதுமக்கள் என அனைவருக்கும் சமமான ஆட்சியாக அதிமுக இரூந்தது டாஸ்மாக் பத்திரப்பதிவு என அனைத்திலும் பல்லாயிரம் கோடி ஊழலில் நடந்து வருகிறது

திமுக ஆட்சியில் அனைத்து வரிகளும் உயர்ந்து விட்டது
விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டது
பத்திர பதிவுத்துறையில் கடும் ஊழல் நடைபெற்று வருகிறது 50 லட்சம் ரூபாய் சொத்து வாங்கினால் 5 லட்சம் கமிஷன் கொடுக்க வேண்டுமாம்
பேரூராட்சி நகராட்சி என அனைத்து பகுதிகளிலும் மின் கட்டணம் அதிகமாக உயர்ந்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 67% மின் கட்டணம் உயர்ந்துவிட்டது.

பேரூராட்சி நகராட்சி பகுதிகளில் தண்ணீர் வரி குப்பை வரி வீட்டு வரி என 100% உயர்த்தி உள்ளனர். சொந்தமாக வீடு இல்லாதவர்களுக்கு அதிமுக வீடு கட்டி தருவோம்.
தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை வழங்கப்படும் கோயில் நிலப் பிரச்சினையை தீர்க்கப்படும் கரூரில் புதிய பேருந்து நிலையம் ஊழல் நாமக்கலிலும் இதே நிலைமைதான் டெக்னிக்களாக ஊழல் செய்வது திமுக என பேசினார்.