மதுரை மாவட்டம் நெடுங்குளம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் மஹாலில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விராதனூர், பனையூர் ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் விராதனூர் பனையூர் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இந்நிகழ்வில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்மணி அழகுபாண்டி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லீலாதேவி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் துணை வட்டாட்சியர் செந்தில்வள்ளி சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பத்மா கிராம நிர்வாக அலுவலர் வெங்கடகணேஷ் வருவாய் ஆய்வாளர் விஜயராணி ஊராட்சி செயலாளர்கள் பழனிச்சாமி, ரமேஷ் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் திமுக மாவட்ட முன்னாள் கவுன்சிலர் கிருத்திகாதங்கபாண்டி ஒன்றிய செயலாளர் தனபாலன் கிளைச் செயலாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.











; ?>)
; ?>)
; ?>)