தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் கடித்து சிறுவர் முதல் பெரியவர்கள் வரை காயம் மற்றும் ஆடுகள், கோழிகள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தெருவில் கூட்டம், கூட்டமாக அலையும் தெரு நாய்களால் மனிதர் முதல் வளர்ப்பு மிருகங்கள் வரை உயிர் பலி நடந்து வரும் நிலையில் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையிலும், மாவட்ட நிர்வாகமோ, தமிழக அரசோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. வனவிலங்கு பாதுகாவலர்கள் மற்றும் சில அமைப்புகள் தெரு நாய்கள் மீது நடவடிக்கை எடுக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்படுவது ஏழைகளும்,பண வசதி இல்லாதவர்களும் தான். ஆகவே அவர்களின் உயிர்களுக்கும் பாதுகாப்பு வழங்கிட உரிய நடவடிக்கை விரைவில் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.