தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது

இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும்
வட்டார மற்றும் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் மாவட்ட அளவில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும்

10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணையை செயல்படுத்த வேண்டும்
நகராட்சி நிர்வாகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் ஊதியத்திற்கு ஏற்ப ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறு த்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என ஊராட்சி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது