புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 100 நாளும் வேலை வழங்க வேண்டும், இந்த விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்று காரைக்கால் மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பொழுது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.