மிலாதுவிழாவை முன்னிட்டு காரைக்கால் மெய்தீன் பள்ளி வீதியில் அமைந்துள்ள அல்- மதரசதுல் ரிஃபாயா அரபி பாட சாலை மாணவ மாணவியர்கள் சார்பில் மீலாதுவிழா ஊர்வம் நடைபற்றது. தாயிரா பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் மாணவ மாணவியர்கள் மற்றும் ஜமாத்தார்கள் பங்குபெற்றனர்.

முக்கிய வீதிகள் வழியாக நடந்து சென்ற மாணவ மாணவியர்களுக்கு மத பாகுபாடின்றி பொதுமக்கள் தங்கலால் இயன்ற பிஸ்கட் மற்றும் மிட்டாய்களை வழங்கி சிறுவர்களுக்கு சிறப்பித்தனர். இவ்விழா ஏற்பாடுகளை தாயிராப்பள்ளி நிர்வாக பொருப்பாளரும் மற்றும் அல்- மதரசத்துல் ரிஃபாய் பாடசாலை நிர்வாக இயக்குனருமான செய்யது ஹாசிம் மெளலானா தலைமையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.











; ?>)
; ?>)
; ?>)