விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சௌந்தரபாண்டியனார் அவர்களின் 133 வது பிறந்தநாளை முன்னிட்டு தனியார் மண்டபத்தில் சிவகாசி நாடார் மகாஜன சங்கம், மற்றும் ராஜேஷ் நினைவு இரத்ததான குழு, சிவகாசி அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த ரத்ததான முகாமில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு முகாமை துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். முகாமில் தொழிலதிபர் கண்ணன், சிவகாசி நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் அறிவொளி ஆண்டவர், அர்ஜுன் சாம் , உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 120 நபர்கள் ரத்ததானம் வழங்கினார்கள்.