தமிழ் இலக்கியப்பெருமன்றத்தின் 267 -வது எழுத்தாளர் சந்திப்பு மற்றும் படைப்பரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங்டன் கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். கவிஞர் க. ஸ்ரீசக்தி நிகழ்ச்சியை நெறியாளுகை செய்தார். ஓய்வு பெற்ற நூலகர் கந்தசாமி கடவுள் வாழ்த்துப்பாடல் பாடினார். துணைச்செயலாளர் அங்குராஜ் வரவேற்பு நல்கினார். கவிதாயினி மா. மகேஸ்வரியின் கவிதை நூலை முனைவர் க. சிவநேசன், தமிழாசிரியை ப. மாரிமுத்து, முனைவர் மணிமேகலை, மூத்த வழக்கறிஞர் எஸ். ரமேஷ், பி. கே. பெரிய மகாலிங்கம் பொன். சுப்புராஜ் ஆகியோர் விமர்சித்தனர். ஆசிரியை மா. மகேஸ்வரி ஏற்புரை நிகழ்த்தினார். மகாகவி பாரதி குறித்து பட்டிமன்றப் புகழ் கா. காளியப்பன் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

புனல்வேலி தமிழ்ப்பித்தனின் எழுத்தில் உருவான வசனம்,,பாடல்களுக்கு இராஜபாளையம் அரசு மகளிர் சிறுவர் நூலக வாசகர் வட்ட மாணவ-மாணவியர் நடத்திய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பரிசளிப்புக்குப்பின், நிகழ்ச்சியின் இறுதியில், துணைச்செயலாளர் ஜி. அங்குராஜ் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.