நாகர்கோவிலில் கனிமொழி ஆச்சரிய கேள்வி.? அதிமுகவின் தலைமை அலுவலகம்
டெல்லியிலா உள்ளது.? திமுகவின் சார்பில் நேற்று (செப்டம்பர் 20) ம் நாள் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும்.

“தமிழ் நாட்டை தலைகுனிய விட மாட்டேன்” என்ற உறுதியேற்பு கூட்டம்
வரிசையில். நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடலின் முன் நடைபெற்றது. மிகுந்த மக்கள் கூட்டம் இருந்ததால், கூட்டம் நடந்த பகுதியில் சாலை போக்குவரத்து முழுவதும் தடை செய்யப்பட்டிருந்தது.
குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் ஆன மகேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில். சிறப்பு பேச்சாளராக. தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி , தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜான் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் பேசிய கனிமொழி. கூட்டத்தினரிடம், அவருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தை பகிர்ந்து கொண்டவர்.
அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை டெல்லிக்கு எப்போது மாற்றினார்கள். தமிழகத்தில் உள்ள அ தி மு க கட்சியை சேர்ந்த முக்கிய மானவர்கள் தினம், தினம் ஏன் டெல்லி செல்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்
தமிழகத்தில் சமத்துவத்தை கொண்டு வருவதற்காக “தமிழகத்தை தலை குனிய விட மாட்டேன்” என்ற தீர்மானம் உறுதிமொழியை கனிமொழி வாசிக்க மேடையில் இருந்தவர்களும், ஒட்டுமொத்த கூட்டத்தினரும்,இடது கையை நீட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.
தமிழகத்தில் கல்விக்கா ரூ.5 ஆயிரம் கோடி ஒன்றிய அரசு தரவேண்டியது.
குலக்கல்வியை ஏற்றால்தான். ரூ. 5 ஆயிரம் கோடி தருவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் அடம் பிடிக்கிறார். இந்தியாவிலேயே அதிகளவில் உயர் படிப்பு மேற்கொள்வதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.
தமிழகத்தில் இந்தியை திணிக்கும் ஆட்சியாக ஒன்றியத்தின் மொழி கொள்கை உள்ளது. பாஜகவின் தாய் ஸ்தானமான ஆர்எஸ்எஸ் நாட்டிற்கு எதிராக செயல்படக் கூடிய இயக்கம். பாஜக தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு
ஜனநாயக நாடான இந்திய மக்களின் வாக்குரிமையை அழித்து வெற்றி பெறுகிறது.
அதிமுகவின் நிலைப்பாட்டை மத்தியில் ஆளும் பாஜக நிர்வகித்து வருகிறது.

எம்ஜிஆர் அண்ணாயிஸம் என்றார்.ஆனால் எடப்பாடி அமித்ஷாயிஸம் என்கிறார். இவர்களது தலைமை யகமே டெல்லிக்கு மாற்றப்பட்டு விட்டதோ என தமிழக மக்கள் நினைக்கும் நிலையில் அதிமுக நிர்வாகிகளின் டெல்லி படையெடுப்பு
சொல்லும் செய்தியாக உள்ளது என கனிமொழி அவரது பேச்சில் தெரியப்படுத்தினார்.
நிகழ்வில் குமரி மாவட்ட அறங்காவலர்கள் குழுவின் முன்னாள் தலைவர் பிரபா G.ராமகிருஷ்ணன் கனிமொழிக்கு நினைவு பரிசு கொடுத்தார். நிகழ்வில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு,தாமரை பாரதி உட்பட ஏராளமானோர் கனிமொழிக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள்.