• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வாக்குச்சாவடி முகவர்களுக்கு வகுப்பு நடத்திய சசிகாந்த்..,

குமரி மார்த்தாண்டத்தில் சசிகாந்த் முன்னாள் ஆ.இ.பா மற்றும் மக்களவை உறுப்பினர் வாக்குச்சாவடி முகவர்களுக்கு வகுப்பு நடத்தினார்.

ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக பாஜக தேர்தல் ஆணையத்தை கூட்டணி சேர்ந்து கொண்டு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டும், பெரும்பான்மை எண்ணிக்கையில் ஆட்சி நடத்த முடியவில்லை என்பதை இந்திய கூட்டணி கட்சிகள் பல்வேறு சான்றுகளுடன் மக்கள் முன் வைத்துள்ள பிரச்சினை. இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் “தீ” யாக பரவி வரும் நிலையில்.

தமிழகத்தில் காங்கிரஸ் மாவட்டம் என்ற புகழை தன்னகத்தே கொண்டுள்ள,குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் தனியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற அரசியல் பயிலரங்கில் ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவர்களின் அடிப்படை பணி மற்றும் இன்று ராகுல் காந்தி வாக்கு சீட்டு திருட்டு என அவர் ஆவணங்களுடன் மக்களை சந்தித்து வரும் சூழலில் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினர் செய்ய வேண்டிய பணிகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மூன்று பணிகள் எவை,எவை என்று தெரிவித்தது.

காங்கிரஸ்க்கு வாக்களிக்க இருப்பவர்களை அடையாளம் காண்பது

எதிராக வாக்களிப்பார்கள் எவர்,எவர் என்பதை அடையாளம் காண்பது.

எந்த கட்சியையும் சாராத தேர்தல் நாள் அன்று முடிவெடுத்து வாக்களிப்பார்கள்,
என்பதை அடையாளம் காண்பது. இவை எல்லா வெற்றிக்கும் மேலாக முக்கியமானது. நாம் இருக்கும் பூத் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களை அடையாளம் காண்பது அடிப்படையான, முக்கியமான பணி.

நாம் பள்ளியில் படித்தபோது பள்ளி புத்தகத்தில் இருந்த பாரதமாதா வேறு.இன்று பாஜகவினர் இப்போது காட்டும் பாரதமாதா காவிக் கொடியுடன், உக்கிரமான சிங்கத்தின் மீது அமர்ந்து இருப்பது போன்றே, ஹனுமான் தோற்றம் உக்கிரமானதாக உள்ளது என்பதை எலக்ட்ரானிக் திரையில் பாடங்களை காண்பித்து வகுப்பு நடத்தினார்.

நிகழ்வில் பேசிய கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்.எவரை நம் தலைவராக தேர்ந்தெடுப்பது நமது உரிமை. இதுதான் ஜனநாயகம் தந்திருக்கும் உரிமை.

ஒன்றிய அரசின் வாக்குத்திருட்டை நம் தலைவர் ராகுல் காந்தி அம்பலப்படுத்தி வருகிறார். தமிழகத்தில், குமரி மாவட்டத்தில் பாஜகவின் பருப்பு வேகமாட்டேன் என்கிறது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களின் அயராத உழைப்புத்தான் காரணம் என தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ் குமார் அவரது பேச்சில் வெளிப்படுத்தியவை,

ஒரு இயக்கம் வலுப்பெற்று மக்கள் மத்தியில் நம்பிக்கை பெறும் வகையில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரது உழைப்பின் மீது கிடைக்கும் வெற்றி.

வாக்காளர்களின் உரிமை பறி போய்விடக்கூடாது என்பதற்காகவும்,வாக்குத் திருட்டு தொடர்பாகவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகப்பெரிய யாத்திரையை இரவு,பகல் பாராமல் நடத்தியுள்ளார்.

நமது வாக்குரிமையை தட்டிப் பறிக்க பட்டால் முதலில் நமக்கு ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, இவை இரண்டும் இல்லாதவர்கள் இந்திய குடி உரிமை இல்லாதவர்கள் என தேர்தல் ஆணையம் சொல்லி நாம் இந்தியர்கள் அல்ல என சொல்லும்.

தலைமுறை, தலைமுறையாக நம் மூதாதையர் வழியில் நாம் இந்தியர்கள்.ஆனால்
மோடியும், தேர்தல் ஆணையமும் நம்மை நாடற்றவர்கள் என ஒதுக்குவதில் இன்பம் காண்பார்கள்.

வரவிருக்கும் 2029 _ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்கும் வகையில் தேர்தல் காலத்தில் நம் உழைக்க வேண்டும். மார்த்தாண்டத்தில் நடக்கும் இந்த பயிலரங்கம். குமரி காங்கிரஸ் வரலாற்றில் ஒரு மைல் கல் என தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ்,தாரகை கத்பட். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர்.பினுலால் மற்றும் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள் திரளாக பங்கேற்றனர். காலை 9_மணிக்கு தொடங்கிய பூத் முகவர்கள் பங்கேற்ற பயிற்சி முகாம் மாலை 5_ மணி வரையில் நடைபெற்றது.

காலை முதல் நிகழ்வாக நிகழ்ச்சி தொடங்கும் முன் காங்கிரஸ் கட்சியின் மூவண்ண கொடியை சிறப்பு விருந்தினரும், திருவள்ளுவர் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில் இயற்றினார்.