புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வரும் மத்திய தேர்தல் ஆணையம், மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து காங்கிராஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமையில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்று வாக்கு திருட்டில் ஈடுபட்டு வரும் மத்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.