தனுஷ் இயக்கி நடித்து உள்ள இட்லி கடை திரைப்படத்தின் டிரைலர் கோவையில் இன்று வெளியிடப்படுகிறது. இதற்காக விமானம் மூலம் தனுஷ் கோவை வந்தார். தனுஷ் வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் காலை முதலே விமான நிலைய வளாகத்தில் குவிய தொடங்கினர்.

தனுசை வரவேற்கும் விதமாக பேனர்கள் மற்றும் மாலைகளுடன் அவரை உற்சாகமாக வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே வந்த தனுஷ் காரில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கை அசைத்தார். அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்தவாறு தனுஷ் வருகை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டனர்.
கோவையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் இன்று மாலை தனுஷின் இட்லி கடை திரைப்பட ட்ரெய்லர் வெளியாகிறது.











; ?>)
; ?>)
; ?>)