கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் புள்ளேகவுண்ட்புதூர் பகுதியில் ரோலக்ஸ் காட்டு யானை முகாமிட்டு இருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் வந்த நிலையில் உடனடியாக சென்ற வனத் துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்த போது ட்ரோன் கேமராவின் சத்தத்தால் அதிர்ந்த காட்டு யானை அருகில் இருந்து மருத்துவர் விஜயராகவனை எட்டி உதைத்ததில், முதுகு பகுதி கை எலும்பு முறிந்து கீழே விழுந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் காட்டு யானையை விரட்டி பின்னர் அவரை மீட்டு கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
இரவு நேரங்களில் காட்டு யானைக்கி மயக்க ஊசி செலுத்தாமல், அதிகாலை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறிய இருந்த நிலையில் அதேபோல இரவு நேரங்களில் (தெர்மல் ட்ரோன்) கேமராவின் அதிக சத்தத்தால் அதிர்ச்சி அடைந்து அங்கும், இங்கு ஓடி சென்ற காட்டு யானை கால்நடை மருத்துவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.