விஸ்வகர்மா ஜெயந்தி விழா சங்கரன்கோவிலில் நடைபெற்றது. கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி என்ற குட்டியப்பா தலைமை வகித்தார், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசியது
அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த அம்மா ஜெயலலிதா இருந்தபோது சிறுபான்மை சமுதாயம், பெரும்பான்மை சமுதாயம் என இல்லாமல் எல்லோரும் மதிக்கக் கூடிய வகையில் நல்லாட்சி புரிந்தார்.
அம்மா வழியில் ஆட்சி செய்த எடப்பாடியாரும் சமூகம் சார்ந்த பிரச்சினை பாகுபாடு இன்றி மாற்று கட்சிகளை சேர்ந்தவர்களையும் அரவணைத்து ஆட்சி செய்தார்.
விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் செய்யும் தொழிலில் சிறப்பாக செய்து முன்னேற வேண்டும். பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் தொழிலை நன்கு கவனித்தால் போதும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியும்.
முழு உடல் உழைப்பை பயன்படுத்தி பண்டைய காலங்களில் வரலாறுகளில் பல்வேறு சாதனை புரிந்தவர்கள்.குறிப்பாக சங்கரன்கோவிலில் உள்ள நெல்லையப்பர் கோவில் சாட்சியாக உள்ளது.

தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு ராஜ ராஜ சோழன் தேர்ந்தெடுத்த சமுதாயம் விஸ்வகர்மா சமுதாயம் பொற்கொல்லரால் அமைக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் கல்லணை ஆயிரம் ஆண்டுகளாகியும் வரலாற்று சுவடுகள் இருக்க அடித்தலமிட்டவர்கள் விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
திருமணத்திற்கு வசதி படைத்தவர்கள் நகைகளை பல்வேறு கடைகளில் வாங்கலாம் ஆனால் தாலி மட்டுமே ஆசாரியிடம் வாங்கினால் மட்டுமே சிறப்பாக இருக்கும் என ஐந்தொழில் புரியும் ஆசாரி சமுதாயத்தினர் மதி நுட்ப வேலைகளால் செய்யப்பட்ட தாலிகளை இன்றும் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
காளியம்மன், மாரியம்மன், உள்ளிட்ட கடவுள்களுக்கும் சிலை கொடுத்தவர்கள் இச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
இச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டின் பொக்கிஷங்கள் என கூறினார்.