• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு 5 பேர் தேர்வு…

ByK Kaliraj

Sep 17, 2025

சென்னையில் நடைபெற்ற 50வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், சிவகாசி அரசன் மாடல் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும், விருதுநகர் மாவட்ட ரைபில் கிளப்பை சேர்ந்த அக்ஷயாஸ்ரீ 10 மீட்டர் பீப் சைட் ஏர் ரைபில் ஜூனியர் பிரிவில் 391 புள்ளிகள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்ததோடு, மேலும் மூன்று பிரிவுகளில் மூன்றாம் இடம் பிடித்து, நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

மற்றொரு வீராங்கனையான துர்கா‌ஶ்ரீ 10 மீட்டர் பீப் சைட் ஏர் ரைபில் பிரிவில் மாநில அளவில் 13 ஆம் இடமும் பிடித்துள்ளார்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் மாஸ்டர் பிரிவில் Dr.சதீஸ் – 348 புள்ளிகள் எடுத்து, மாநில அளவில் ஆறாம் இடம் பெற்றதோடு, அடோனா செரின் சப்-யூத் பிரிவில் 342 புள்ளிகள் எடுத்து 16 ஆம் இடமும், கார்னிகாஶ்ரீ 324 புள்ளிகள் எடுத்து மாநில அளவில் 45 ஆம் இடமும் பெற்று மாநில அளவில் தடம் பதித்துள்ளனர்.

10 மீட்டர் ஓப்பன் சைட் ஏர் ரைபில் பிரிவில் ஆராதனா 307 புள்ளிகள் எடுத்து மாநில அளவில் சப்- யூத் பிரிவில் 15 ஆம் இடம் பிடித்து, நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். ‌மேலும் கமலக்கண்ணன், சுரேஸ், துளசிராம், சுவேதா ரூபாலி ஆகியோரும் இப்பிரிவில் பங்கேற்று அதிக புள்ளிகள் பெற்று சிறப்பித்துள்ளனர்.

50 மீட்டர் ஏர் ரைபில் பிரோன் பிரிவில் டேனியல், கார்த்திக் ஜெயரமன், சுரேஸ், நல்லுபிரசாத் ஆகிய நான்கு பேர் பங்கேற்று சிறப்பித்த‌னர்‌‌.

13 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் விருதுநகர் மாவட்ட ரைபிள் கிளப் சார்பாக கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டு மாநில அளவில் சிறப்பு சேர்த்ததோடு, திருச்சி (ரைபில் போட்டி) மற்றும் திருவனந்தபுரம்(பிஸ்டல் போட்டி) ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள தென்னிந்திய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்று சிறப்பு சேர்த்துள்ளனர். விருதுநகர் மாவட்ட ரைபில் கிளப்பின் செயலாளரும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினருமான அரசன் AMSG. அசோகன்,MLA அவர்கள் வீரர்-வீராங்கனைகளை வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்கள்.