உலக ஒசோன் தினத்தை முன்னிட்டு தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் இன்று திருச்சி பொன்மலை பகுதியில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவரும், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளமான கே.சி.நீலமேகம், தலைமையில் மரக்கன்றுகள் நடவு விழா நடைபெற்றது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், ஒசோன் அடுக்கு சீர்கேட்டைத் தடுக்கவும், எதிர்கால தலைமுறைக்காக பசுமையான சூழலை உருவாக்கவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
விழாவில்: “ஒசோன் அடுக்கு பாதுகாப்பு என்பது காற்றையும், நீரையும், மண்ணையும் பாதுகாப்பதற்கான அடிப்படை. பசுமை வளம் அதிகரிக்க வேண்டியது அவசியம்.
மரக்கன்றுகள் நடுதல் மட்டுமல்ல, அவற்றை பராமரித்து வளர்ப்பதும் மிகப் பெரிய பொறுப்பு. இதனை சமூகமுழுவதும் உணர வேண்டும்” என்ற நோக்கத்தில் நடந்தது.

நிகழ்வில் பொன்மலை மரம் பாலா, தண்ணீர் அமைப்பின் நிர்வாகிகள் செயலாளர் பேரா. கி.சதீஸ்குமார், துணை செயலாளர் ஆர்.கே.ராஜா வி.சந்திரசேகர், ரயில்வே ஏ.பி.ஒ சுந்திரமூர்த்தி, தடகள சங்க பொருளாளர் ரவிசங்கர், மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் கனகராஜ், எஸ்.ஆர்.இ.எஸ் (SRES) எஸ்.ரகுபதி, காஜாமலை கரிகாலன், ஸ்ரீராம், பாலமுருகன், கொட்டப்பட்டு திருநாவுகரசு, கதிர், மோகன், மூர்த்தி, ராஜேஷ் மற்றும் நண்பர்கள் , சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் உற்சாகமாக பங்கேற்றனர். பள்ளி மாணவர்கள் பசுமையைப் பாதுகாப்பதின் முக்கியத்துவம் குறித்து சுவாரஸ்யமான பிரசங்கங்களும் நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 100-க்கும் மேற்பட்ட நாட்டு, பசுமைத் தோற்றம் தரக்கூடிய மரக்கன்றுகள் நட்டுவைக்கப்பட்டன.