தேனி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு திட்டங்கள் மற்றும் உதவித்தொகை முறையாக கிடைக்கவில்லை எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்தும் உதவித்தொகை வழங்கப்படாமல் அலைக்கழித்து வருவதாகவும்,
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச இருசக்கர வாகனம் வழங்காமல் மாவட்ட நிர்வாகம் அலைகழித்து வருவதாகவும் இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலரிடம் கேட்கச் சென்றால் தங்களை இழிவாக பேசுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து மாற்றுத்திறனாளி நல அலுவலர் எதிராக கோஷங்களை எழுப்பி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருகை தந்த தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங்கை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அரசு திட்டங்கள் எதுவும் தங்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என்றும் இது குறித்து கேட்கச் சென்றால் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் தங்களை இழிவாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக குற்றச்சாட்டு தெரிவித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசன் திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துச் சென்றார். இதனால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சிறிது நேரத்தில் பரபரப்பாக காணப்பட்டது.