நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான ஓவியத் திருவிழா நிகழ்வின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. கார்மல் மேல்நிலைப்பள்ளியில் வைத்து எல்.கே.ஜி. முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கான
மாவட்ட அளவிலான மாபெரும் ஓவியப்போட்டி சிறப்பாக நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் முழுமையிலிருந்தும் 1300 மாணவ மாணவியர்கள் சிறப்பாக பங்கேற்று தங்களது கைவண்ணத்தை தூரிகை மூலம் அழகாக காட்சிப்படுத்திருந்தனர். அவர்களுடைய சிறந்த படைப்புகளிலிருந்து 101 பேர்களின் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பரிசளிப்பு விழா
இன்று(செப்டம்பர்_14)ம் நாள் கார்மல் கலையரங்கில் நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை தலைமை தாங்கினார். கார்மல் பள்ளி பாடகர் குழுவினர் தமிழ் தாய் வாழ்த்து பாட, ஆசிரியர் பபிலன் அனைவரையும் வரவேற்றார். உதவித் தலைமை ஆசிரியரும் விழா ஒருங்கிணைப்பாளருமான அருட்தந்தை ஜேசு நேசம் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்துவைக்க அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னிலையில் 2025 ஆண்டின் சிறந்த ஓவியம் தேர்வு செய்யப்பட்டது.
ஆசாரிபள்ளம் பெல்பில்டு மெட்ரிக் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவி ரெசிகா அவர்கள் போதை குறித்து வரைந்த விழிப்புணர்வு ஓவியப் படைப்பு சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ஸ்மார்ட் டிவி பரிசளிக்கப்பட்டது.
கிளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நாகர்கோவில் மாநகராட்சியின் 46 ஆவது வார்டு உறுப்பினரும் கார்மல் பள்ளியின் முன்னாள் மாணவருமான வீரசூரப் பெருமாள், நாகர்கோவில் எம்.எம். ஜூவல்லரி உரிமையாளர் உமா மகேஷ்வரன் . ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினர்.
பள்ளியின் தாளாளர் மற்றும் அதிபர் அருட்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் ஆசியுரை வழங்கினார்.

நிகழ்வில் எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு தர நிலையை அடிப்படையாக வைத்து முதல் மூன்று சிறப்பு பரிசுகளும் பத்து மாணவர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டன. ஸ்மார்ட் டிவி, சைக்கிள், மிக்ஸி,பிரஷர் குக்கர், உட்பட பல்வேறு சிறப்பு பரிசுகளும்,சான்றிதழ் மற்றும் வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் இறுதியில் கார்மல் பள்ளியின் ஓவிய ஆசிரியரும் நிகழ்வின் ஏற்பாட்டாளருமான தினேஷ் நன்றி கூறினார்.