• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று ஆசிரியர் என்.ராமகிருஷ்ணன் காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று ஆசிரியரும்,தோழர் என்ஆர் என அழைக்கப்பட்ட என்.ராமகிருஷ்ணன் காலமானார்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும்,சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவின் சகோதரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த எழுத்தாளருமான என்.ராமகிருஷ்ணன் நேற்று இரவு மதுரையில் காலமானார்.


இதனையடுத்து,அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


82 வயதான என்.ராமகிருஷ்ணன் ,தமிழில் 76 நூல்கள், ஆங்கிலத்தில் 10 நூல்கள், 25-க்கும் மேற்பட்ட மொழியாக்கங்கள் என வாழும் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்தவர்.மேலும்,இவர் கம்யூனிச இயக்க வரலாற்றை ஆவணப்படுத்துவதை தனி மனித இயக்கமாகவே மேற்கொண்டவர்.இவர், எழுதிய மார்க்ஸ்-பெரியார்-அம்பேத்கர் என்ற நூல் பெரிதும் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.