மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த விசிக நிர்வாகியும் போட்டோ கிராப்பராக உள்ளவர் பெரியசாமி.
இவர் மதுபான பழக்கத்திற்கு அடிமையாகி வேலைகளுக்கு செல்லாமல் இருந்ததால் மனைவி மீனாவுடன் குடும்பத்தில் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,மேலும் விசிக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.