கோவையில் நான்கு மையங்களில் யுபிஎஸ்சி தேர்வு நடைபெறும் நிலையில் தாமதமாக வந்த தேர்வுகள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படாததால் திரும்பிச் சென்றனர்…

இன்று மத்திய அரசு தேர்வாணாயத்தின் UPSC ஒருங்கிணைந்த இராணுவ தேர்வுகள்(2) நடைபெறுகிறது. கோவையில் நான்கு தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதனை எழுத 1535 பேர் தேர்வு விண்ணப்பித்துள்ளனர்.
கோவையில் அவிநாசிலிங்கம் கல்லூரி உள்ளேயே இரண்டு மையங்கள், ஆர்எஸ் புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, PSG கல்லூரி ஆகிய நான்கு தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறுகிறது.

அதில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பாளர் அலுவலர்களும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இரண்டு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு எழுத வரும் தேர்வர்கள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்களை எடுத்து வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் தேர்வு எழுத வரும் அனைத்து தேர்வர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

8:30 மணிக்கு வாயிற்கதவு பூட்டப்பட்டதால் அதனையடுத்து வந்த தேர்வர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படாததால் பல தேர்வர்கள் தேர்வெழுதாமல் திரும்பி சென்றனர்.