மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் தலைவர் தஸ்லீம் பானு தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். ஆசிரியை உறுப்பினர் அருவகம் வரவேற்றார்.

கூட்டத்தில் போதை இல்லா தமிழகம், மாணவர் சேர்க்கை, கலைத்திருவிழா, தற்காப்பு கலை பயிற்சி, கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டிடம், கழிப்பறை, குடிநீர், சுற்றுச்சுவர் பழுது பார்ப்பு, திறன் திட்டம், எண்ணும் எழுத்தும், வாசிப்பு இயக்கம், மணற்கேணி செயலி முதலியன குறித்து கலந்துரையாடல் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மதுரை கிழக்கு பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர் சேது ராஜன் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகள், சமூக தணிக்கை, பள்ளியின் வளர்ச்சியில் பங்கு ஆகியவை குறித்து உரை நிகழ்த்தினார். உறுப்பினர் சல்மா நன்றி கூறினார். கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.