• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

7 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமா உலகிற்குள் வரும் ரமீஸ் ராஜா..,

Byஜெ.துரை

Sep 13, 2025

டார்லிங் – 2
(2016) ஹாரர் காமெடி படத்தையும் விதிமதி உல்டா (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா.

இவருடன் இரண்டு படங்களிலும் இணைந்து நடித்த நடிகர் நடிகையர்கள் கலையரசன் ,காளி வெங்கட்,கருணாகரன், சென்றாயன், சித்ராலட்சுமணன் ஞானசம்பந்தம், மாயா, ஜனனி ஐயர் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

டார்லிங் – 2 படத்தை ஞானவேல் ராஜாவின் கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டிருந்தது.

விதிமதி உல்டா வெளியான பிறகு ஏற்பட்ட தோல்வியால் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு திரையுலகைவிட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆனால் அந்தப் பிரச்சனை களுக்கு இடம் அளிக்காமல் தன்னம்பிக்கையுடன் சொந்த தொழில் தொடங்கி தொழிலதிபரானார் அவர் தொழிலதிபராகி தொடங்கிய SKYLANES மற்றும் LIGHT WEIGHT RR SPESIALISED ROOFINGS PVTLTD நிறுவனம் இன்று அஸ்பால்டிக்ரஃபிங் உற்பத்தியில் தனித்துவமான மோனோபோலி நிறுவனமாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டது.

SKYLANES மற்றும் LIGHT WEIGHT RR SPECIALISED ROOFINGS PVTLTD நிறுவனத்தை பிரபலமான நிறுவனமாக நிலைநிறுத்திய பிறகு மீண்டும் சினிமாவிற்கு திரும்பிவருகிறார் ரமீஸ் ராஜா.

இன்று வாய்ப்புத் தேடி வருகின்றவர்கள் முதலில் தனக்கென்று ஒரு தொழிலை அடிப்படையாக உருவாக்கிக் கொண்டு அதன் பிறகு வந்தால் இந்தத் திரையுலகில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் தோல்விகள் வந்தாலும் அதை எதிர்த்து போராடி வெற்றி பெற முடியும் என்று தனது அனுபவங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் ரமீஸ்ராஜா.

இது குறித்து ரமீஷ் ராஜா பகிர்ந்ததாவது,

சினிமா எனது ஆர்வம் ஆனால் அதோடு சேர்த்து தொழிலையும் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை நான் புரிந்துக்கொண்டேன்

தொழில் வேறு ஆர்வம் வேறு இது தான் விதிமதி உல்டா திரைப்படம் மூலம் காலம் எனக்கு கற்பித்த பாடம்.

எதிர்கால இளம் திறமையாளர்களுக்கு என் அறிவுரை,கனவைத் தொடர்ந்து சாதிக்க முயற்சி செய்யுங்கள் ஆனால் அதேசமயம் வாழ்க்கைக்கு ஒருவலுவான அடித்தளத்தையும் உருவாக்கிக்கொள்ளுங்கள்.

இப்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்குப் பிடித்த சினிமா உலகிற்குள் மீண்டும் தயாரிப்பாளராகவும, கதாநாயகனாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள மீண்டும். வருகிறேன்.

அதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்துக்கொண்டிருக்கிறது இன்றைய சூழ்நிலையில் மக்களிடையே ஹாரர், திரில்லர் படங்களுக்குதான் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதனால்தான் அடுத்த படத்தையும் ஹாரர் படமாக உருவாக்க அதற்கான கதை டிஷ்கஷன் நடந்துக் கொண்டிருக்கிறது. நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வும் நடந்துக்கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் புதுவிதமான கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறேன்.

இந்தப் படத்தை மிகுந்த பொருட்செலவில் வித்தியாசமான கதையமைப்போடு அனைவரையும் கவரும் விதத்தில் நானே தயாரிக்கிறேன்.

டார்லிங் – 2,
விதிமதி உல்டா போன்ற படங்களுக்கு உங்களது ஆதரவை அளித்ததைப்போல் தொடர்ந்து இப்போது ரெடியாகி வரும் புதிய படத்திற்கும் ஆதரவளிக்க வேண்டு மென்று கேட்டுக்கொள்கிறேன். என்றார் ரமீஸ் ராஜா.