கோவை, கணபதியைச் சேர்ந்தவர் சேகர் (70). இவர் 25.11.2023 அன்று உறவினர் வீட்டிற்கு வந்து இருந்த 2 ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை கிழக்கு மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சேகருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தது.