• Wed. Jan 28th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

போதையில் சென்ற இருவர் கார்கள் மீது மோதி சேதம்.,

BySeenu

Sep 12, 2025

கோவையில் பல்வேறு சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் அதிவேகமாக வாகனங்களை இயக்கும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்பொழுது வேகமாக இயக்குவதை மாநகரப் பகுதிகளில் குறைத்து உள்ளனர்.

இதை அடுத்து மாநகரப் பகுதியில் விபத்துகளின் உயிரிழப்புகளும் குறைந்து உள்ளது.

இந்நிலையில் கோவை வடவள்ளியில் இருந்து கோவை மாநகருக்குள் பல பகுதிகளில் செல்லும் முக்கிய சாலையான லாலி ரோடு போதையில் இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் இயக்கி முன்னோக்கி சென்ற வாகனங்கள், கார்கள் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தி சென்றனர். அவர்களை மடக்கிப் பிடித்த வாகன ஓட்டிகள் அந்த நபர்களை காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அப்பொழுது எடுக்கப்பட்ட செல்போன் வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விபத்துகள் குறித்து காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், இது போன்ற போதை ஆசாமிகளால் அவர்களின் உயிரிழப்புகள் மட்டுமின்றி பொதுமக்கள் உன் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் முன்பு இது போன்ற அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அனைவரின் பயணம் பயன் உள்ளதாக அமையும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.