தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வாகம்புளி புது தெரு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மாங்கனி கார் பார்க்கிங்ல் இயங்கி வருகிறது
இதன் உரிமையாளர் ரஜ்யா பேகம், அப்துல் ஷரிப் . நிஜாத் அகமது நிர்வகித்து வருகிறார்.

இந்த கார் பார்க்கிங் இடமானது ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இங்கி வருகிறது.
இந்த கார் பார்க்கிங்கில் சுமார் 150 கார்களுக்கு மேலான கார்களை நிறுத்திவைக்கப்பட்டும் மேலும் இருசக்கர வாகனங்களும் 100-க்கு மேற்பட்ட வாகனங்களும் நிறுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு மாங்கனி கார் பார்க்கிங் உரிமையாளர் கார் பார்க்கிங் நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்ட நிலையில் இன்று காலை கார் பார்க்கிங் நிறுவனத்தை பிறந்து பார்த்தபோதுஅங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களில் 26 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு கார்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தை கண்ட கார் பார்க்கிங் உரிமையாளர் அதிர்ச்சி அடையவே பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில்கார் பார்க்கிங் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி ஆய்வு மேற்கொண்ட போது இரண்டு நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது சிசிடிவி காட்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டு.
அதில் இரண்டு நபர்கள் கார்களை உடைத காட்சி பதிவாயிருந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கார்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய நபர் ஒருவரை தென்கரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பெரியகுளம் தென்கரைப் பகுதியில் வீடுகளில் கார்களை நிறுத்த இடவசதி இல்லாத நபர்கள் தங்களது கார்களை சாலையில் நிறுத்துவதன் மூலம் பாதுகாப்பு இல்லை என கருதி இது போன்ற தனியாருக்கு சொந்தமான கார் நிறுத்தத்தில் நிறுத்தி வந்த நிலையில் இது போன்ற சம்பவம் நடந்திருப்பதால் காரின் உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள் ஆளாகியுள்ளனர்.
மேலும் காவல்துறையினர் விசாரணையில் இப்பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் அப்பகுதி மக்கள் குடியிருந்த நிலையில் ஆட்சேபனை அற்ற இடங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்கிட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கார் பார்க்கிங் உரிமையாளர் தரப்பிலிருந்து என்க்ரோச்மென்ட் செய்வதற்காக நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதனை பெற்றுக் கொண்டதில் ஆத்திரம் அடைந்த அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.