• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விதியா? மதியா?

Byவிஷா

Dec 13, 2021

ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று கேட்டான். “மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன் விதியா, இல்லை அவன் மதியா?”.
ஞானி சொன்னார். “ஒரு காலை உயர்த்தி மறு காலால் நில்”
கேள்வி கேட்டவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் இடது காலை உயர்த்தி வலது காலால் நின்றான்.


ஞானி சொன்னார். “சரி அந்த இன்னொரு காலையும் உயர்த்து”
அவனுக்குக் கோபம் வந்து விட்டது. நம் நடிகர் வடிவேலு மாதிரி “என்ன சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு” என்று சீறினான். “இரண்டு காலையும் உயர்த்தி எப்படி ஐயா நிற்பது?”
ஞானி அமைதியாகச் சொன்னார்.

“நான் காலைத் தூக்கச் சொன்ன போது எந்தக் காலைத் தூக்குவது என்று தீர்மானம் செய்தது உன் மதி. ஒரு முறை தீர்மானித்த பிறகு மறு காலையும் ஒருசேரத் தூக்கி நிற்க முடியாது என்பது விதி. பாதியை உன் மதி தீர்மானிக்கிறது.

மீதியை உன் விதி தீர்மானிக்கிறது”
அந்த ஞானியின் வார்த்தைகளில் சூட்சுமமான இன்னொரு உண்மையும் இருக்கிறது.
விதி என்பதே முன்பு நாம் மதி கொண்டு தீர்மானித்ததன் பின் விளைவாகவே பெரும்பாலான நேரங்களில் இருக்கின்றது.