மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட சோழவந்தான் பேரூர் மற்றும் வாடிப்பட்டி தெற்கு வடக்கு ஒன்றிய பகுதிகளில் முக்குலத்து தலைவர்களின் குருபூஜை விழாக்கள் பிறந்தநாள் விழாக்கள் நினைவு தின நிகழ்ச்சிகளை திமுகவை சேர்ந்த வெங்கடேசன் எம் எல் ஏ தொடர்ச்சியாக புறக்கணித்து வருவதாக இந்த சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர் என்பவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானவராக இருக்கும் நிலையில் தலைவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகளில் பாரபட்சம் பார்க்காமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூக்கையா தேவர் குருபூஜை விழாவை தொடர்ச்சியாக புறக்கணித்து வரும் சம்பவம் நடைபெற்று உள்ளது. கடந்த ஐந்தாம் தேதி சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் வெங்கடேசன் எம் எல் ஏ மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அதைத்தொடர்ந்து மறுநாள் செப்டம்பர் 6ஆம் தேதி மூக்கையா தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள மூக்கையாத்தேவர் திருவருட்சிலைக்கு திமுக சார்பில் வெங்கடேசன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்தார் அதைத் தொடர்ந்து செப்டம்பர் 11ஆம் தேதி சோழவந்தான் காமராஜர் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தியாகி இமானுவேல் அவர்களின் திருவருவப்படத்திற்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டார் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த மூன்று நிகழ்ச்சிகளில் மூக்கையாத்தேவர் குருபூஜை விழாவை மட்டும் வெங்கடேசன் எம்எல்ஏ புறக்கணித்தது திமுக நிர்வாகிகள் மற்றும் முக்குலத்தோர் சமுதாய நிர்வாகிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது சென்ற ஆண்டும் இதேபோல் சோழவந்தானில் நடைபெற்ற மூக்கையா தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக இது போன்று செயல்பட்டு வரும் வெங்கடேசன் எம்எல்ஏவுக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அவரை வேட்பாளராக நிறுத்தினாலும் சரி அல்லது அவர் சார்ந்த திமுக சார்பில் யார் வேட்பாளராக நின்றாலும் சரி அவர்களுக்கு வாக்களிக்க போவதில்லை என முக்குலத்து சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.