விருதுநகர் Y M C A திருமண மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இன்று காலை Y M C A திருமண மஹாலில் 3, 14 மற்றும் 15 ஆகிய மூன்று வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது இந்த முகாமில் காவல் துறை, நகராட்சி,மின்சாரம், சுகாதாரம் ,தொழிலாளர் நலம் மற்றும் வேளாண்மை ஆகிய மொத்தம் 18 துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்று அதற்கான ரசீதினையும் வழங்கினர். காலை 09 மணி முதல் மாலை 03 மணி வரை நடக்கும் இந்த முகாமில் பொதுமக்கள் மனுவினை அளிக்க திரளாக கலந்து கொண்டனர்.
