• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் கோவையில் பேட்டி !!!

BySeenu

Sep 9, 2025

கோவையில் நடைபெறும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கோவை விமான நிலையம் வந்த கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசும்போது :-

நாம் ஜனநாயக முறையில் INDIA Bloc வேட்பாளருக்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அனைவரும் உணர்வுடன் வாக்களிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளோம். India bloc மற்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து, NDA வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்து உள்ளோம். உணர்வு பொங்கிய வாக்காக அது அமையும் என்பதில் நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

அப்போது பத்திரிகையாளர்கள் சுப்ரீம் கோர்ட் ஆதார் அட்டையை 13 வது அடையாள ஆவணமாக சேர்த்துள்ளது, பற்றி எழுப்பிய கேள்விக்கு,

ஆதார் அட்டை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். அதை யூ.பி.ஏ. அரசு அறிமுகப்படுத்தியது. அது தான் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை ஆவணமாக உள்ளது. அதுவே காங்கிரஸ் கட்சியும், யூ.பி.ஏ.வுமே மக்களுக்குக் கொடுத்த பெரும் பங்களிப்பு எனக் கூறினார்.