திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஆக்கிரமிப்பு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

நிலக்கோட்டை தாலுகா எத்திலோடு கிராமம் பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
ஊர் பொது கோவிலான காளியம்மன், பகவதி அம்மன் கோவில் அருகே உள்ள நத்தம் புறம்போக்கு இடத்தை கோவில் விசேஷங்களுக்கு மற்றும் கோவில் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தி வருகின்றோம்.
இந்நிலையில் ஒரு சிலர் அந்த இடத்தை அக்கிரமிப்பு செய்துள்ளனர்.
காவல்துறையினரும் மற்றும் வருவாய்த்துறையினரும் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்தும் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நிலத்தை கையகப்படுத்த வேண்டும்.
எனவே மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்யும் நபர்களிடமிருந்து இடத்தை மீட்டு ஊர் நலனை காக்க வேண்டி மனு அளித்தனர்.